மட்டக்களப்பிலுள்ள பிரண்டிக்ஸ் தொழிற்சாலை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவும் பதிவுகள் தொடர்பான தெளிவுபடுத்தல்மட்டக்களப்பிலுள்ள பிரண்டிக்ஸ் தொழிற்சாலை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவும் பதிவுகள் தொடர்பான தெளிவுபடுத்தல்

Brandix Facility in Batticaloa

கொழும்பு, 29 மே 2021: மட்டக்களப்பிலுள்ள எமது பிரண்டிக்ஸ் தொழிற்சாலை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்று பகிரப்படுவதாக எமது கவனத்துக்கு கொண்டு வரப்பட்டிருந்தது. பின்வரும் தெளிவுபடுத்தல்களை வழங்க நாம் எதிர்பார்க்கின்றோம்.

மட்டக்களப்பிலுள்ள பிரண்டிக்ஸ் ஆடைத் தொழிற்சாலை தனது முழுக் கொள்ளளவில் இயங்கும் போது சுமார் 5,012 நேரடி ஊழியர்களை பணிக்கமர்த்தக்கூடிய வசதிகளைக் கொண்டுள்ளது. எவ்வாறாயினும், சுகாதார அதிகாரத் தரப்பினரால் வழங்கப்பட்ட சுகாதார மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளின் பிரகாரம், தமிழ், சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் இந்த எண்ணிக்கை 4,050 ஊழியர்களாக குறைக்கப்பட்டது. இவர்களுள் தமிழ், சிங்களப் புத்தாண்டு விடுமுறைகளின் பின்னர் பணிக்குத்திரும்பியவர்களில், இன்று (2021 மே 29) வரை மொத்தமாக 70 ஊழியர்கள் கொவிட்-19 தொற்றுக்குள்ளானவர்கள் என பரிசோதனைகள் மூலம் அடையாளம் காணப்பட்டனர் என நிறுவனம் உறுதி செய்கிறது.

தொற்றுக்குள்ளானவர்கள் இனங்காணப்பட்டதைத் தொடர்ந்து எமது சுகாதார மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி, பிரதேசத்தைச் சேர்ந்த பொது சுகாதார பரிசோதகர் மற்றும் மருத்துவ சுகாதார அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி, அவர்களின் ஆலோசனைகளை பின்பற்றப்பட்டது. பாதிக்கப்பட்ட ஊழியர்கள் அவசியமான பராமரிப்பைப் பெற்றுக் கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகளை நாம் மேற்கொண்டு, அவர்களின் தேவைகளை புரிந்து கொள்வதற்காக தொடர்ச்சியாக அவர்களுடன் தொடர்பைப் பேணுகின்றோம். அவர்களின் குடும்பத்தாருக்கு அவசியமான உதவிகளையும் நாம் வழங்கி வருகின்றோம்.

தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை நாம் இனங்கண்டு, விதிமுறைகளின் பிரகாரம், அவர்களை சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தும் வகையில் உடனடியாக அவர்களின் வீடுகளுக்கு அனுப்பியுள்ளோம். தொடர்பில் இருந்தவர்களின் தகவல்கள் அனைத்தையும் பொது சுகாதார பரிசோதகர் மற்றும் மருத்துவ சுகாதார அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளதுடன், அரசாங்க சுகாதார அதிகாரத் தரப்பினரின் வழிகாட்டலுக்கமைய, தொடர்பில் இருந்தவர்களுக்கான பிசிஆர் பரிசோதனைகளும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தனிமைப்படுத்தலில் இருந்தவர்கள் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவதுடன், பிசிஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டு, 14 நாள் சுய தனிமைப்படுத்தலை பூர்த்தி செய்து, தமது பணிகளுக்கு மீளத்திரும்பும் முன்னர் சகல ஊழியர்களின் சுகாதார நிலை உறுதி செய்யப்படுகின்றது.

கொவிட்-19 தொற்றுப் பரவல் இனங்காணப்பட்ட எந்தவொரு ஊழியரும், தாம் வசிக்கும் சமூகத்தில் தொற்றுப்பரவலை ஏற்படுத்தாமல் இருக்கும் வகையிலான கடுமையான முற்காப்பு விதிமுறையை நிறுவனம் பின்பற்றுகின்றது. இதற்கு மேலதிகமாக, கடந்த ஆண்டு முதல், கர்ப்பிணி ஊழியர்கள், ஏற்கனவே நோய்வாய்ப்பட்டுள்ள ஊழியர்கள் மற்றும் இதர இனங்காணப்பட்ட பிரிவுகளுக்குள் அடங்குபவர்கள் தமது வீடுகளில் இருப்பதை நாம் உறுதி செய்துள்ளதுடன், அவ்வாறு வீடுகளில் இருக்கும் காலப்பகுதியில் அவர்களுக்கான முழு சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை நாம் வழங்கியிருந்தோம்.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் – மட்டக்களப்பு, பிராந்திய தொற்றுநோய் தடுப்பு நிபுணர், மருத்துவ நிபுணர் - சூழல் மற்றும் தொழில்சார் சுகாதாரம் மற்றும் மட்டக்களப்பு சுகாதார சேவைகள் பிராந்திய பணிப்பாளரின் பிராந்திய மலேரியா அதிகாரி அடங்கிய குழுவினர் மட்டக்களப்பு ஆடைத் தொழிற்சாலைக்கு 2021 மே 25 ஆம் திகதி விஜயமொன்றை மேற்கொண்டிருந்தனர். இவர்கள் மேற்கொண்டிருந்த ஆய்வுகளைத் தொடர்ந்து, இந்தத் தொழிற்சாலை சகல சுகாதார மற்றும் பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி இயங்குவதாக உறுதி செய்திருந்தனர். இதனூடாக, எமது ஊழியர்களின் சுகாதார நலன் தொடர்பில் நாம் காண்பிக்கும் அக்கறை மேலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நீடிக்கப்பட்ட தவிர்ப்பு ஏற்பாடாக, 2021 மே மாதம் 26 ஆம் திகதி முதல் மட்டக்களப்பு தொழிற்சாலையின் செயற்பாடுகளை ஜுன் மாதம் 07 ஆம் திகதி வரை நாம் தற்காலிகமாக இடை நிறுத்தியுள்ளோம். சுகாதார அதிகாரத் தரப்பினரின் வழிகாட்டல்களின் பிரகாரம், எமது ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் எமது பணிகளை நாம் தொடர்ந்து முன்னெடுப்போம்.

மட்டக்களப்பிலுள்ள எமது தொழிற்சாலையினூடாக மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் அதற்கு அப்பாலான சமூகங்களைச் சேர்ந்த சுமார் 5000 பேருக்கு தொழில் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. எமது ஊழியர்களின் சுகாதாரம் மற்றும் நலனை உறுதி செய்வது என்பது எமது நிறுவனத்தின் முக்கியமான அம்சமாகும். மாவட்டத்தில் செயற்பாடுகளை நிறுவிய முதல் ஆடைத் தொழிற்சாலை நிறுவனம் எனும் வகையில், நேரடியாகவும் மறைமுகமாகவும் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்தி நேர்த்தியான தாக்கத்தை ஏற்படுத்துவதில் நாம் தொடர்ச்சியாக பங்களிப்பு வழங்கியுள்ளோம். அத்துடன் சமூகத்தாரின் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக எமது சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளையும் நாம் முன்னெடுத்துள்ளோம். பாதுகாப்பான மற்றும் பொறுப்பு வாய்ந்த தொழில் வழங்குநர் எனும் வகையில் எமது அர்ப்பணிப்பை நாம் தொடர்வதுடன், மட்டக்களப்பு சமூகத்தின் அங்கத்தவராகவும் திகழ்கின்றோம்.

message
Greetings from Brandix close
Hello and welcome to Brandix. I am here to help you with Careers at Brandix.